தர்மத்தின் வெற்றி – நேர்மையின் வெற்றி – விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் – புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பாராட்டு

தர்மத்தின் வெற்றி – நேர்மையின் வெற்றி – விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் – புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பாராட்டு

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். அ.இ.அ.தி.மு.க விற்கு எதிராக, கடுமையான பிரச்சாரத்தில் எதிர்கட்சியினர் ஈடுபட்ட போதும், வாக்காள பெருமக்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், இவ்விரண்டு தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை வழங்கி உள்ளனர்.

வேலூர் நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தேர்தலில், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய மூன்று தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க விற்கு கூடுதலான வாக்குகளை, மக்கள் வழங்கி இருந்தனர். தொடர்ந்து தற்போது நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அ.இ.அ.தி.மு.க விற்கு வெற்றிக் கனியை பரிசளித்துள்ளனர். இந்த வெற்றி, மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு சான்றாகும். இந்த வெற்றியானது, வர போகும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் 2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல், ஆகியவற்றில் அ.இ.அ.தி.மு.க பெற போகும் மாபெரும் வெற்றிக்கு அச்சாரம் ஆகும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும், சூறாவளி சுற்றுபயணம் செய்து, மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில,; தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியதை, மக்களும் ஏற்று கொண்டு, அவர்கள் மனம் உவந்து அளித்த மாபெரும் வெற்றியை பரிசாக பெற்றுள்ள, மாண்புமிகு முதல்வர் டாக்டர். எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு. ழு. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சியிள் சார்பில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வெற்றியின் மூலம.; புரட்சித் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அவர்களால் எ. ;.கு கோட்டையாக பலமுடன் திகழும் அ.இ.அ.தி.மு.க. வை யாராலும், எவராலும் அசைக்க முடியாது என்னும் சிறப்பு தீர்ப்பினை மக்கள் வழங்கி உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.