Category: Latest News

103 வது பிறந்தநாள் விழா – டாக்டர்.எம்.ஜி.ஆர்

103 வது பிறந்தநாள் விழா – டாக்டர்.எம்.ஜி.ஆர்

டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் அவர்களும், புதிய நீதிக்கட்சியின் செயல்தலைவர் A.ரவிக்குமார் அவர்களும் உடன் இருந்தனர்.

வளர்ச்சி பாதையில் முன்னேறும் தமிழகம் – டாக்டர்.A.C.சண்முகம்

வளர்ச்சி பாதையில் முன்னேறும் தமிழகம் – டாக்டர்.A.C.சண்முகம்

“வளர்ச்சி பாதையில் முன்னேறும் தமிழகம்”
தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு, புதிய நீதிக்கட்சியின்
நிறுவனர் – தலைவர் பாராட்டு

2020 ஆண்டு துவக்கததிலேயே, தமிழக சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் துவங்கியுள்ளது. இந்த உரை தமிழகம் வளர்ச்சி பாதையில் முன்னேறும் வகையில் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு 563.50 கோடியில் திட்டம். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.மாநிலத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். காவிரி – தெற்கு வெள்ளாறு இணைணப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். குடிமராமத்து திட்டங்கள் மூலம் நீர் வளங்களை பெருக்குவதால், குடிநீர் பஞ்சம் தீரும். விவசாயமும் செழிக்கும். 5 புதிய மாவட்டங்கள் மூலம் அரசு நிர்வாகத்தின் பலன்கள். மக்களை சென்றடைய வழிவகை உருவாகி உள்ளது வரவேற்கதக்கது. அதேபோல் காந்தியடிகளின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடபடும் இந்த இனிய தருணத்தில், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு ரூ.2.00 கோடி மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாராட்டுக்குரியது.

முதலமைச்சரின் சிறப்ப குறை தீர்ப்பு திட்டத்தின் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். கோதாவரியில் இருந்து 200 TMC நீர் காவிரி வடிநிலத்திற்கு தேவை என்ற கோரிக்கை வரவேற்கத்ததக்கது. சென்னையில் குடிபஞ்சத்தை தீர்க்க உரிய நேரத்தில் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து நீர் திறந்துவிட்ட ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாராட்டத்தக்க அம்சங்கள் நிறைந்த கவர்னர் உரையை புதிய நீதிக்கட்சியின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றேன்

ஆங்கில புத்தாண்டு – டாக்டர். ஏ.சி.சண்முகம்

ஆங்கில புத்தாண்டு – டாக்டர். ஏ.சி.சண்முகம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர். எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களையும், புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் – டாக்டர். ஏ.சி.சண்முகம் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

“மதங்களைக் கடந்து – மனிதம் வளர்ப்போம்” புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து செய்தி – டாக்டர்.ஏ.சி.சண்முகம்

கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து செய்தி – டாக்டர்.ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்களின் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து செய்தி.

காவலன் SoS – செயலி – அறிமுக விளக்க கூட்டம்

காவலன் SoS – செயலி – அறிமுக விளக்க கூட்டம்

காவலன் SoS- செயலி அறிமுக விளக்க கூட்டம் இன்று டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நிகர்நிலைப்) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.திரு.ஏ.சி. சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்கள் “இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.” இதில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Dr.A.K. விஸ்வநாதன் IPS அவர்களும், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் Er.ஏ.சி.எஸ் அருண்குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

தீபாவளி வாழ்த்து செய்தி – டாக்டர்.ஏ.சி.சண்முகம்

தீபாவளி வாழ்த்து செய்தி – டாக்டர்.ஏ.சி.சண்முகம்

நாட்டினை சூழ்ந்துள்ள சவால்களை, நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று இந்த நல்ல நாளில் சபதம் ஏற்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தர்மத்தின் வெற்றி – நேர்மையின் வெற்றி – விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் – புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பாராட்டு

தர்மத்தின் வெற்றி – நேர்மையின் வெற்றி – விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் – புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பாராட்டு

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். அ.இ.அ.தி.மு.க விற்கு எதிராக, கடுமையான பிரச்சாரத்தில் எதிர்கட்சியினர் ஈடுபட்ட போதும், வாக்காள பெருமக்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், இவ்விரண்டு தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை வழங்கி உள்ளனர்.

வேலூர் நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தேர்தலில், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய மூன்று தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க விற்கு கூடுதலான வாக்குகளை, மக்கள் வழங்கி இருந்தனர். தொடர்ந்து தற்போது நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அ.இ.அ.தி.மு.க விற்கு வெற்றிக் கனியை பரிசளித்துள்ளனர். இந்த வெற்றி, மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு சான்றாகும். இந்த வெற்றியானது, வர போகும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் 2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல், ஆகியவற்றில் அ.இ.அ.தி.மு.க பெற போகும் மாபெரும் வெற்றிக்கு அச்சாரம் ஆகும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும், சூறாவளி சுற்றுபயணம் செய்து, மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில,; தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியதை, மக்களும் ஏற்று கொண்டு, அவர்கள் மனம் உவந்து அளித்த மாபெரும் வெற்றியை பரிசாக பெற்றுள்ள, மாண்புமிகு முதல்வர் டாக்டர். எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு. ழு. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சியிள் சார்பில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வெற்றியின் மூலம.; புரட்சித் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அவர்களால் எ. ;.கு கோட்டையாக பலமுடன் திகழும் அ.இ.அ.தி.மு.க. வை யாராலும், எவராலும் அசைக்க முடியாது என்னும் சிறப்பு தீர்ப்பினை மக்கள் வழங்கி உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

AC. சண்முகம் | தமிழ்நாடு அனைத்து கிறிஸ்தவ  மக்கள்  கூட்டமைப்பு

AC. சண்முகம் | தமிழ்நாடு அனைத்து கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு அனைத்து கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் வேலூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. ஏ. சி. சண்முகம் அவர்களுக்கு முழு ஆதரவு அளித்தனர்.

இந்நிகழ்வில் மாண்புமிகு பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு. கே.சி வீரமணி அவர்கள் கலந்து கொண்டார்…