ஏ.சி. சண்முகம் அவர்களின் பன்முகங்கள்!

ஆற்றல் வாய்ந்த தொழில் அதிபராக தன் ஊரிலும், அதைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் இவர் நிறுவிய பல்வேறு நிறுவனங்களினால், பலருக்கு வேலை வாய்ப்பு சாத்தியமாகி உள்ளது.

ஒரு தொலைநோக்கு கல்வியாளர்

மூன்று சேவை நிறுவனங்களும், கல்வித்தொண்டு நிறுவங்களையும் சென்னை, ஆரணி, பெங்களூரு ஆகிய இடங்களில் நிறுவி, இவரின் நேரடி பார்வையில், இவரின் தலைமையில் பல கல்லூரிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

மறைந்த தலைவர் MGR அவர்களின் பெயரில் ஏ.சி. சண்முகம் அவர்களுக்கு இருக்கும் அபிமானம், நன்றி இவற்றை எடுத்துக் காட்டும் வண்ணம், டாக்டர் MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி மய்யம் சுயசார்புள்ள பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டு, சென்னையில் வெற்றிகரமாக, எல்லா துறைக்கான கல்லூரிகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பெங்களூரில் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியும் இயங்குவது மட்டுமில்லாமல், நல்ல தரமான கல்லூரிகள் என்ற நிலுவையில் முன்னிற்கின்றன.

எல்லா வசதிகளும் கொண்ட பல் மருத்துவமனை ஒன்று சென்னையில் நிறுவப்பட்டு MGR பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கிறது.

எல்லா தரமான, மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்று சென்னையில் ACS மருத்துவ கல்லூரி என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது.

இவற்றை தவிர மருத்துவ தொழிலை சார்ந்த மற்ற கல்விகளுக்காகவும் சென்னையிலும், பெங்களூரிலும் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்

டாக்டர் MGR பல்கலைகழகத்தின் வேந்தராகவும், நிறுவனராகவும், 45 கும் மேற்பட்ட கல்லூரிகளுடனும், பல்கலைக்கழகங்களுடனும் குறிப்பாணை ஒப்பந்தங்கள் கொண்டுள்ளார்.

இன்டர்நேஷனல் மெடிக்கல் சயின்ஸ் அகாடமி என்று பல நாடுகளிலிருந்து உறுப்பினர்களையும், நோபல் பரிசுகள் வாங்கிய உறுப்பினர்களையும் கொண்ட ஒரு சர்வதேச நிறுவனம், கல்ப் மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் ஒரு விழாவில் இவரை கௌரவ உறுப்பினார்க சேர்த்துக்கொண்டு கௌரவித்தது. மருத்துவ துறையில் இவரின் பங்கை அங்கீகரித்து கொடுக்கப்பட்ட கௌரவமாகும் இது. ஒரு கல்வியாளருக்கு இப்படிப்பட்ட கவுரவம் அளிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

மருத்துவரல்லாத ஒருவருக்கு Royal College of Physicians and Surgeons of Glasgow, UK கௌரவப் பட்டமாக FRCPS அளிக்கப்பட்டது, திரு கிர நாராயணன் அவர்களுக்கு பிறகு ஏ.சி. சண்முகம் அவர்களுக்கு மட்டுமே. இதுவே இவரின் மருத்துவ, மற்றும் மருத்துவம் சார்ந்த மற்ற துறைகளிலும் இவர் ஆற்றிய சாதனைகளுக்கு சான்றாகும்.