வேலூர் தொகுதி மக்களுக்கு சொந்த மருத்துவமனையில் இலவச மருத்துவம்… ஏ.சி.சண்முகம் அதிரடி அறிவிப்பு..!

வேலூர் தொகுதி மக்களுக்கு சொந்த மருத்துவமனையில் இலவச மருத்துவம்… ஏ.சி.சண்முகம் அதிரடி அறிவிப்பு..!

வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்கம் வெற்றிபெற்றால் சொந்த மருத்துவமனையில் வேலூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரியை நிறுவி, அந்த மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டணம் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். அதற்காக அவருக்கு ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அஜ்மான் நகரில், பன்னாட்டு மருத்துவ அறிவியல் கழகமும், கல்ஃப் மருத்துவ பல்கலைகழகமும் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. ஆகையால் அவர் தரும் வாக்குறுதி நிறைவேற்றுவார் என அதிமுக ரத்தத்தின் ரத்தங்களும் நம்பிக்கையை விதைத்து வருகின்றனர்.

Source: https://tamil.asianetnews.com/politics/hospital-free-care-ac-shanmugam-announcement–poet4i