வளர்ச்சி பாதையில் முன்னேறும் தமிழகம் – டாக்டர்.A.C.சண்முகம்

வளர்ச்சி பாதையில் முன்னேறும் தமிழகம் – டாக்டர்.A.C.சண்முகம்

“வளர்ச்சி பாதையில் முன்னேறும் தமிழகம்”
தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு, புதிய நீதிக்கட்சியின்
நிறுவனர் – தலைவர் பாராட்டு

2020 ஆண்டு துவக்கததிலேயே, தமிழக சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் துவங்கியுள்ளது. இந்த உரை தமிழகம் வளர்ச்சி பாதையில் முன்னேறும் வகையில் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு 563.50 கோடியில் திட்டம். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.மாநிலத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். காவிரி – தெற்கு வெள்ளாறு இணைணப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். குடிமராமத்து திட்டங்கள் மூலம் நீர் வளங்களை பெருக்குவதால், குடிநீர் பஞ்சம் தீரும். விவசாயமும் செழிக்கும். 5 புதிய மாவட்டங்கள் மூலம் அரசு நிர்வாகத்தின் பலன்கள். மக்களை சென்றடைய வழிவகை உருவாகி உள்ளது வரவேற்கதக்கது. அதேபோல் காந்தியடிகளின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடபடும் இந்த இனிய தருணத்தில், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு ரூ.2.00 கோடி மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாராட்டுக்குரியது.

முதலமைச்சரின் சிறப்ப குறை தீர்ப்பு திட்டத்தின் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். கோதாவரியில் இருந்து 200 TMC நீர் காவிரி வடிநிலத்திற்கு தேவை என்ற கோரிக்கை வரவேற்கத்ததக்கது. சென்னையில் குடிபஞ்சத்தை தீர்க்க உரிய நேரத்தில் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து நீர் திறந்துவிட்ட ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாராட்டத்தக்க அம்சங்கள் நிறைந்த கவர்னர் உரையை புதிய நீதிக்கட்சியின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றேன்